சென்னை: செயற்கை நுண்​ணறி​வுக்கு மனிதர்​களைப் போல தனிப்​பட்ட விழிப்​புணர்வு கிடை​யாது என்று சுவாமி சர்​வப்​ரியானந்தா தெரி​வித்​தார். சென்னை சர்​வ​தேச மையம் சார்​பில் ‘பண்​டைய ஞானம் நவீன காலக் கேள்​வி​களுக்​குப் பதிலளிக்க முடியுமா?’ என்ற தலைப்​பிலான சிறப்பு கருத்​தரங்​கம் தியாக​ராய நகரில் நேற்று நடை​பெற்​றது.

ராமகிருஷ்ண மடத்​தின் துறவியும், ஆன்​மிகச் சொற்​பொழிவாள​ரு​மான சுவாமி சர்​வப்​ரியானந்தா சிறப்பு விருந்​தின​ராக கலந்​து​கொண்டு, தான் எழுதிய ‘மனம் மற்​றும் நனவு பற்​றிய உரையாடல்​கள்’ என்ற நூலை வெளி​யிட்​டார். அதன் முதல் பிரதியை டிவிஎஸ் கேப்​பிட்​டல் தலை​வர் கோபால் சீனிவாசன் பெற்​றுக்​கொண்​டார்.

தொடர்ந்து சுவாமி சர்​வப்​ரியானந்தா பேசிய​தாவது: நான் யார் என்​பது மனிதர்​கள் தங்​களுக்​குள் கேட்​டுக்​கொள்ள வேண்​டிய மிக முக்​கிய​மான கேள்வி. இதற்​கான பதில்​கள் உபநிடதங்​கள் காலத்​தில் இருந்தே இந்​தி​யத் தத்​து​வத்​தில் உள்​ளன.

புத்த மதம், அத்​வைதம், விசிஷ்​டாத்​வைதம் உள்​ளிட்ட பல்​வேறு தத்​து​வங்​களுக்கு இடையே நடை​பெற்ற விவாதங்​கள் இந்​தி​யத் தத்​து​வத்தை வளர்த்​துள்​ளன. தற்​போது குவான்​டம் இயற்​பியல், நரம்​பியல் உள்​ளிட்ட நவீன அறி​வியல் துறைகள் மனித விழிப்​புணர்வு குறித்த பல்​வேறு கேள்​வி​களுக்கு விடை தேடி வரு​கின்​றன.

மனித மூளை எவ்​வாறு விழிப்​புணர்வை உரு​வாக்​கு​கிறது என்​பது இன்​னும் முழு​மையாக விளக்​கப்​படாத ஒன்று. செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) பல திறன்​களைப் பெற்​றிருந்​தா​லும், அதற்கு மனிதர்​களைப் போன்ற தனிப்​பட்ட விழிப்​புணர்வு இருப்​ப​தாகக் கூற முடி​யாது. அறிவாற்​றலும், விழிப்​புணர்​வும் வெவ்​வேறானவை.

மனிதர்​கள் பலராகவும், அவர்​களது உடல், மனம், எண்​ணங்​கள் வெவ்​வேறாகவும் இருந்​தா​லும், அனைவருக்​குள்​ளும் இருக்​கும் அடிப்​படை விழிப்​புணர்வு ஒன்​றுதான் என்​பதே அத்​வைதத்​தின் முக்​கிய கருத்து. அனைத்து உயிர்​களும் ஒரே அடிப்​படை உண்​மையின் வெளிப்​பாடுகள்.

இதை உணரும்​போது வெறுப்பு, பொறாமை, பகைமை குறைந்து அன்​பும், ஒற்​றுமையும் உரு​வாகும். அனைத்து உயிர்​களும் அடிப்​படை​யில் ஒன்​றுதான் என்​பதை உணர்ந்​தால், பிறருக்​குத் தீங்கு செய்​யும் எண்​ணம் ஏற்​படாது. இவ்​வாறு அவர் பேசினார்.

மீன்பிடி குறைவுகால நிவாரணம் ரூ.7 ஆயிரமாக உயர்வு