சென்னை,
கோவில்களுக்கு சொந்தமான சுமார் 3,084.95 ஏக்கர் நிலங்களை பத்திரப்பதிவு செய்து கொள்ள அனுமதி வழங்கி தவெக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு, இடைக்காலத் தடை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்விற்கு நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
இடைக்காலத் தடை
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
முழு மனதுடன் வரவேற்று மகிழ்கிறோம்!
கடந்த ஜூலை மாதம், கரூர் வெண்ணெய் மலையில் உள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், விகிர்தீஸ்வரர் கோவில் உட்பட பல கோவில்களுக்கு சொந்தமான சுமார் 3,084.95 ஏக்கர் நிலங்களை பத்திரப்பதிவு செய்து கொள்ள அனுமதி வழங்கி தவெக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு, இடைக்காலத் தடை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்விற்கு தமிழக பாஜக சார்பாக எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நடக்கவும் விட மாட்டோம்
அதுமட்டுமன்றி, ‘கோவில் நிலங்களின் மீதான பத்திரப்பதிவு தடையை நீக்க அரசு ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது?’ என்ற கேள்வியின் மூலம், இந்துக்களின் மனக் குமுறல்களையும், தவெக அரசின் ‘வாக்கு வங்கி’ அரசியலையும் ஒரே சமயத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள, நீதிமன்றத்திற்கு ஒட்டுமொத்த இந்துக்களும் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளோம். ‘ஊரான் வீட்டு நெய்யில், தனது வீட்டிற்கு ஸ்வீட் செய்து கொள்ளலாம்’ என மனக் கோட்டை கட்டிக் கொண்டிருந்த முதல்-அமைச்சர் விஜய்யின் ஆணவத்திற்கு, இந்த தீர்ப்பு ஒரு சம்மட்டி அடி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
எனவே, நாங்கள் மீண்டும் சொல்கிறோம், அரசியல் ஆதாயத்திற்காக கோவில் நிலங்களை யார் தாரைவார்க்க நினைத்தாலும் அது நடக்காது! நடக்கவும் விட மாட்டோம்!
வெற்றிவேல்! வீரவேல்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

