வங்கக்கடலில் நிலவும் முரசு புயலானது சென்னைக்கு கிழக்கே - வடகிழக்கே 180 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காலமான தற்போது வங்கக்கடலில் 2-வது புயல் உருவாகி இருக்கிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதி வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய அந்தமான் நிகோபர் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், தொடர்ந்து தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து நேற்று புயலாகவும் உருவானது. இந்த புயலுக்கு 'முரசு' என பெயரிடப்பட்டு இருக்கிறது.
முரசு புயல் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் நிலவும் முரசு புயலானது சென்னைக்கு கிழக்கே - வடகிழக்கே 180 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. ஆந்திராவின் நெல்லூரிலிருந்து கிழக்கு - தென்கிழக்கே சுமார் 160 கி.மீ. தொலைவில் முரசு புயல் உள்ளது. முரசு புயல் சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.
புயல் நெல்லூருக்கும் நரசபூருக்கும் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே இன்று நள்ளிரவு முதல் கரையை கடக்கும். முரசு புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

