சென்னை,

தங்கம் விலை கடந்த வார தொடக்கத்தில் உயர்ந்து வந்த நிலையில், வார இறுதியில் அதிரடியாக குறைந்தது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.2,480-ம், கிராமுக்கு ரூ.310-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,730-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில் இந்த வார தொடக்கத்தில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,02,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.