ஈரோடு பெருந்துறையில் உள்ள தனியார் கல்லூரியில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொள்ளும் நிலையில் ஏற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் விஜய்பாலாஜி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
செங்கோட்டையன் பேட்டி
அதைத்தொ டர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-பெருந்துறையில் முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. நாளை (அதாவது இன்று) அனைத்து பணிகளும் நிறைவுபெறும். முதல்-அமைச்சர் எங்கு சென்றாலும் ஊர்வலம் தான். 'ரோடு ஷோ' என்று இல்லாமல் முதல்-அமைச்சர் செல்லும் இடத்துக்கு அனைத்து பகுதி பொதுமக்களும் அவரை காண வருவார்கள்.
விஜய் வருவதே ரோடு ஷோதான்
முதல்-அமைச்சர் தெலுங்கானா சென்றபோதும் கூட்டம் ஆர்ப்பரித்தது. இந்தியாவிலேயே மக்கள் வரவேற்கும் தலைவராக முதல்-அமைச்சர் விஜய் உள்ளார். முதல்-அமைச்சர் வருவதே 'ரோடு ஷோ'தான். மக்களை எப்படி சந்திக்க வேண் டும் என்பது அவருக்கு தெரியும். பெருந்துறைக்கு முதல்-அமைச்சர் விஜய் வருகை இடைத்தேர்தலுக்காக அல்ல. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மகளிர் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 13 மாவட்டங்களை ஒருங்கிணைத்து நிகழ்வு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

