அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிறிய ரக ஜெட் விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர்.
டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் இருந்து பஹாமாஸ் தீவுக்கு சிறிய ரக ஜெட் விமானம் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, புளோரிடா மாகாணத்தின் வான்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது, விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானத்திலிருந்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இருப்பினும், விமானம் விழுந்த பகுதியில் தரையில் இருந்த யாருக்கும் உயிர் சேதம் ஏற்பட்டதா என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும், விபத்தின் நேரடிக் காட்சிகள், அங்கிருந்த காரின் டேஷ் கேமராவிலும் அப்பகுதி மக்கள் எடுத்த செல்போன் விடியோக்களிலும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
⚡ private Learjet 60 Aircraft crashed into a mobile home park in Greenacres, Florida, USA.
— Warfront (@Warfront_2630) November 2, 2026
Flight tracking and reports identify it as a civilian Learjet 60 (N722BD) that left Austin, TX, then entered a rapid descent and hit near Greenacres.
9 people were onboard - FAA has… pic.twitter.com/pWAorrwCCL

