சென்னை: “நீதித்​துறை​யின் அன்​றாட நட​வடிக்​கைகள் மற்​றும் நீதிப​தி​களைத் தனிப்​பட்ட முறை​யில் தாக்கி, அவதூறு ஏற்​படுத்​தும் வித​மாக போராட யாருக்​கும் அனுமதி வழங்​கக் கூடாது” என்று தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இஸ்​லாம் மதத்​துக்கு மாறிய ஒரு​வர், பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பைச் சேர்ந்த முஸ்​லிம் என சாதி சான்று கோர முடி​யாது என்று உயர் நீதி​மன்ற மதுரை கிளை கடந்த ஜூன் 25-ம் தேதி உத்​தர​விட்​டிருந்​தது.

இந்த உத்​தரவைக் கண்​டித்து தமிழகம் முழு​வதும் தமிழ்​நாடு தவ்​ஹீத் ஜமாத், தமிழ்​நாடு முஸ்​லிம் முன்​னேற்​றக் கழகம் உள்​ளிட்ட அமைப்​பு​கள் போராட்​டங்​களை நடத்​தின. அப்​போது தீர்ப்பு வழங்​கிய நீதிப​திக்கு எதிராக அவதூறு ஏற்​படுத்​தும் வகை​யில் பிரச்​சா​ரம் செய்​த​தாகக் குற்​றம் சாட்டி சென்​னையைச் சேர்ந்த ஆர்.கார்த்​தி​கேயன் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​தார்.

அவரது மனுவில், “தீர்ப்பு வழங்​கும் நீதிப​தி​களைத் தனிப்​பட்ட முறை​யில் தாக்கி பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்ட இஸ்லாமிய அமைப்​பு​கள் மீது நட​வடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும்.

எதிர்​காலத்​தில் நீதிப​தி​களைத் தனிப்​பட்ட முறை​யில் அவ​மதித்து பிரச்​சார பொதுக்​கூட்​டங்​கள், போராட்​டங்​கள் நடத்​தவோ, சமூக வலை​தளங்​களில் பதி​விடவோ அனுதிக்​கக் கூடாது” என்று கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்​மாதி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முருகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது காவல்​துறை தரப்​பில், உயர் நீதி​மன்ற நீதிப​தியை அவ​மதிக்​கும் வகை​யில் அனுமதி​யின்றி போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​கள் மீது வழக்​குப் பதிவு செய்து நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாகத் தெரி​விக்​கப்​பட்​டது.

அதன்​பின் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: நீதித்​துறை சுதந்​திரம் அரசி​யல் சட்​டத்​தின் அடிப்​படை கட்​டமைப்பு என உச்ச நீதி​மன்​றம் ஏற்​கெனவே தெளிவுபடுத்​தி​யுள்​ளது. அதில் யாரும் தலை​யீடு செய்ய முடி​யாது.

நீதித்​துறை எடுக்​கும் முடிவு​களுக்​காகத் தனிப்​பட்ட முறை​யில் நீதிப​தி​களைப் பொது வெளி​யில் விமர்​சிப்​பது, அவர்​களைத் தாக்கி பிரச்​சா​ரத்​தில் ஈடு​படுவது, போராட்​டம் நடத்​து​வது என்​பது அரசி​யலமைப்பு சட்ட நடைமுறை​யின் வேரையே பாதிக்​கச் செய்​து​விடும்.

நீதி​மன்ற தீர்ப்​பு​களுக்கு தனிப்​பட்ட முறை​யில் சம்​பந்​தப்​பட்ட நீதிப​தி​களைக் குறிவைத்து தாக்​கிப் பேச முடி​யாது. அது கருத்து மற்​றும் பேச்சு சுதந்​திர வரையறைக்​குள்

வராது. அதேநேரம் அனைத்து பொது விவாதங்​களுக்​கும், அமைதி​யாகக் கூடி போராட்​டத்​தில் ஈடு​படுவதற்​கும் பொத்​தாம் பொது​வாகத் தடை விதித்​து​விட முடி​யாது.

நீதித்​துறை​யின் நேர்மை, பாது​காப்​புக்கு அச்​சுறுத்​தல் ஏற்​படுத்​தும் வகை​யில் எந்த நிகழ்​வும் நடை​பெறவில்லை என்​பதை அரசு இயந்​திரம் உறுதி செய்ய வேண்​டும்.

குறிப்​பாக நீதித்​துறை​யின் அன்​றாட நட​வடிக்​கைகள் மற்​றும் நீதிப​தி​களைத் தனிப்​பட்ட முறை​யில் தாக்கி, அவதூறு ஏற்​படுத்​தும் வித​மாகப் போராட யாருக்​கும் அனுமதி வழங்​கக் கூடாது. நீதிப​தி​களுக்கு அச்​சுறுத்​தல் விடுக்​கும் நபர்​கள் மீது போலீ​ஸார் சட்ட ரீதி​யாக உரிய நட​வடிக்கை எடுக்க வேண்​டும்.

சிஜேபி நிர்வாகி சவுரவ் தாஸ் பூர்வீகம் குறித்து விசாரணை நடத்த கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு