கோவை,
கோவை அன்னூர் பகுதியை சேர்ந்தவர் ராகவன். இவர் வழிப்பறி வழக்கில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின்னர், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைப்பதற்காக கோவை மத்திய சிறைக்கு அழைத்துவரப்பட்டார்.
கைதி தப்பியோட்டம்
கோவை மத்திய சிறையில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். ராகவனை முதல் நுழைவு வாயிலில் இருந்து 2-வது நுழைவு வாயிலுக்கு அழைத்துவந்தபோது, அவரது கையில் போடப்பட்டிருந்த விலங்கினை போலீசார் அகற்றினர். அந்த நேரத்தில் திடீரென ராகவ் அங்கிருந்து தப்பிச்சென்றார். தப்பியோடிய ராகவனை விரைவாக பிடிக்கும் முயற்சியில் பந்தயச்சாலை போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

