புதிய அட்டவணை
சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவையின் கால அட்டவணையை தெற்கு ரெயில்வே மாற்றி அமைத்துள்ளது. இந்த புதிய கால அட்டவணை நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி, சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் -சென்டிரல் இடையே புதிய மின்சார ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ரெயில் திருவள்ளூரில் இருந்து மதியம் 12.25 மணிக்கு புறப்பட்டு 1.45 மணிக்கு சென்டிரல் வந்தடையும். காலை 7.10 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு பட்டாபிராம் வரை இயக்கப்பட்டு வந்த ரெயில் சேவை, திருவள்ளூர் வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த ரெயில் 8.30 மணிக்கு திருவள்ளூர் வந்தடையும். இந்த ரெயில் 8.45 மணிக்கு திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு 10.20 மணிக்கு சென்டிரல் சென்றடையும்.
சென்டிரலில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர் வரை இயக்கப் பட்டு வந்த மின்சார ரெயில் கடம்பத்தூர் வரை நீட்டிக்கப்படுகிறது. மறுமார்க்க மாக இந்த ரெயில் கடம்பத்தூரில் இருந்து மதியம் 3.35 மணிக்கு புறப்பட்டு 5.05 மணிக்கு சென்டிரல் வந்தடையும். சென்டிரலில் இருந்து இரவு 7.30 மணிக்கு அரக்கோணத்துக்கு அதிவேக மின்சார ரெயிலாக இயக்கப்பட்டு வந்த ரெயில் சேவை இனி அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
நீட்டிப்பு
இதேபோல, சென்டிரல் -சூலூர்பேட்டை வழித்தடத்தில் புதிய கால அட்டவணை யின் படி சில ரெயில் சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்டிரலில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் சூலூர்பேட்டை வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த ரெயில் சூலூர் பேட்டையில் இருந்து 8.10 மணிக்கு புறப்பட்டு 10.40 மணிக்கு சென்டிரல் வந்த டையும்.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில், அரக்கோணத்தில் இருந்து 7.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கூடுவாஞ்சேரியில் நின்று செல்லும். சென்னை கடற்கரை - தாம்பரம் -செங்கல்பட்டு - காஞ்சீபுரம் - அரக்கோணம் வழித்தடம், சென்னை கடற்கரை - வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் கால அட்டவணை மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

