கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டத்தில் நர்சிங் மாணவி கர்ப்பமானது தொடர்பாக 17 வயது சிறுவன் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நர்சிங் மாணவி கர்ப்பம்
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 21-ந்தேதி அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
சிறுவன் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு
இது தொடர்பாக குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், பெயிண்டிங் வேலை பார்த்து வரும் 17 வயது சிறுவன் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

