ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியல், இந்த சீரியலில் பல்வேறு அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் ஒவ்வொரு நாள் எபிசோடும் நகர, கோவிலில் நடக்கும் விசேஷ பூஜையும், சாமுண்டீஸ்வரியைப் பழிவாங்க ஸ்ரேயாவும் சிவனாண்டியும் சேர்ந்து போடும் சதித் திட்டமும் அடுத்த எபிசோடில் பரபரப்பைக் கூட்டவுள்ளது.

புனித நீர் குடம் சுமந்த ரேவதி:

ரேவதி தலையில் புனித நீர் குடத்தைச் சுமந்தபடி ஊர்வலமாகக் கோவிலுக்குச் செல்கிறாள். இதைப் பார்த்த சிவனாண்டியும் அவரது சித்தப்பாவும் அதிர்ச்சியடைகிறார்கள். சாமுண்டீஸ்வரி எப்படி இதற்குச் சம்மதித்தாள்? என்று பேசும் அவர்கள், இந்த நிகழ்ச்சியை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று திட்டம் போடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல், சாமுண்டீஸ்வரி அந்தக் குடும்பத்துடன் மீண்டும் சேர்வதைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்கிறார்கள்.

ஆனால், அவர்கள் நினைத்ததற்கு மாறாக கோவிலில் அனைத்து பூஜைகளும் நல்லபடியாக நடந்து முடிகின்றன. ராஜராஜன் தனது அம்மாவுக்குப் புனித நீரை ஊற்றி வழிபடுகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஜாமீனில் வெளியே வந்த ஸ்ரேயா:

இதற்கிடையில், சிவனாண்டியும் அவரது சித்தப்பாவும் காவல் நிலையத்திற்குச் சென்று ஸ்ரேயாவை ஜாமீனில் வெளியே அழைத்து வருகிறார்கள். வெளியே வந்ததும், இனிமேல் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து செயல்படலாம் என்றும் அடுத்த கட்டத் திட்டத்தை ஆரம்பிக்கலாம் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

ஸ்ரேயா ஜாமீனில் வெளியே வந்த விஷயத்தை இன்ஸ்பெக்டர் போன் செய்து கார்த்திக்கிடம் சொல்கிறார். இதைக் கேட்டு ரேவதியும் கார்த்திக்கும் அதிர்ச்சியடைகிறார்கள். அவர்கள் வெளியே வந்துவிட்டதால் இனிமேல் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று இருவரும் பேசிக்கொள்கிறார்கள்.

மீண்டும் ஸ்ரேயாவின் சதி:

மறுபக்கம், சாமுண்டீஸ்வரியை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று ஸ்ரேயாவும் சிவனாண்டியும் சேர்ந்து ஒரு திட்டம் போடுகிறார்கள். அதன்படி, முத்துவேலிடம் சாமுண்டீஸ்வரியின் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் சென்று, அவரது துப்பாக்கியில் இருக்கும் ஒரு குண்டை மட்டும் எடுத்துவரச் சொல்கிறார்கள். அந்தக் குண்டை வைத்து சாமுண்டீஸ்வரியைப் பெரிய பிரச்சனையில் சிக்க வைக்கலாம் என்றும் திட்டம் போடுகிறார்கள்.

இதற்கு முத்துவேலும் சம்மதிக்கிறான். இரவு நேரத்தில் வீட்டில் உள்ள அனைவரும் பேசிவிட்டு தூங்கிய பிறகு, ரகசியமாக வீட்டிற்குள் நுழைகிறான். யாருக்கும் தெரியாமல் சாமுண்டீஸ்வரியின் துப்பாக்கியில் இருந்த ஒரு குண்டையும் எடுத்துவிடுகிறான்.

இப்படியாக ஸ்ரேயாவும் சிவனாண்டியும் சேர்ந்து போட்ட சதித் திட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இந்தக் குண்டை வைத்து சாமுண்டீஸ்வரியை எப்படி சிக்க வைக்கப் போகிறார்கள்? அவர்களது திட்டத்தை கார்த்திக் கண்டுபிடித்து முறியடிப்பாரா? என்பதை அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.