'இந்தியா தாக்குதல் நடத்தலாம்' என்கிற பயத்தால், லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆகியோர் பாகிஸ்தானில் உள்ள பலத்த பாதுகாப்பு கொண்ட ரகசிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யார் இவர்கள்?

மும்பை 26/11 தாக்குதல் உள்ளிட்ட பல பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக ஹபீஸ் சயீத் இந்தியாவால் தேடப்பட்டு வருகிறார்.

புல்வாமா, பதான்கோட் மற்றும் நாடாளுமன்றத் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்டவர் மசூத் அசார் ஆவார்.

operation sindoor
Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்
'இது முதல் முறை' - மீண்டும் பூமிக்குத் திரும்பிய ஸ்டார்ஷிப் விண்கலம்; எலான் மஸ்க்கின் SpaceX சாதனை!

இதில் ஹபீஸ் சயீத் லாகூரிலிருந்து பாகிஸ்தான் ராணுவத் தலைமையகத்திற்கு அருகிலுள்ள ராவல்பிண்டிக்கும், மசூத் அசார் சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷாவிற்கும் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ (ISI)-ன் நேரடிப் பாதுகாப்பில் இருப்பதாகத் தெரிகிறது.

ஏன் இந்த மாற்றம்?

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இந்த இடமாற்றம் நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இவர்கள் இருவரும் தங்களது அமைப்புகளுடன் நேரடித் தொடர்பு கொள்வதைக் குறைத்துக்கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட சில நபர்கள் மூலமாகவோ அல்லது ஆடியோ செய்திகள் மூலமாகவோ மட்டுமே தொடர்பு கொண்டு வருவதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

சர்வதேச பயங்கரவாதிகள்...

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்த வழக்குகளில் ஹபீஸ் சயீத் லாகூரின் கோட் லக்பத் சிறையில் தண்டனை அனுபவித்து வருவதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனால், இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் இதனை மறுக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரும், இந்தியாவில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் இந்தியாவால் தேடப்பட்டு வருகின்றனர்.

"ஜென்சன்‌ ஹுவாங்‌ இல்லையென்றால் Nvidia-க்குப் பாதிப்பு" - காரணத்தை விளக்கும் எலான் மஸ்க்