புதுடெல்லி,

நடிகர் சத்யேன் சதுர்வேதி நடித்த காட்சிகள் படத்தின் இறுதிப்பதிப்பில் இடம்பெறவில்லை. இதனை நடிகர் சத்யேன் சதுர்வேதி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

காட்சிகள் நீக்கம்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணம்’ திரைப்படம் நவம்பர் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சுமந்திரன் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யேன் சதுர்வேதி நடித்திருந்தார். ஆனால், அவர் நடித்த காட்சிகள் படத்தின் இறுதிப்பதிப்பில் இடம்பெறவில்லை. இதனை நடிகர் சத்யேன் சதுர்வேதி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சத்யேன் சதுர்வேதியின் பதிவு

இதுதொடர்பாக படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அவர், "ஒரு நடிகர் படமாக்கும் அனைத்து காட்சிகளும் இறுதியில் திரையில் இடம்பெறுவதில்லை. இது எங்களது பயணத்தின் ஒரு பகுதியாகும். நிதேஷ் திவாரி இயக்கத்தில் நமித் மல்ஹோத்ரா தயாரித்த ராமாயணம் படத்தில் சுமந்திரனாக நான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டன.இருப்பினும், நமது இதிகாசத்தில் இடம்பெற்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க என்னைத் தேர்வு செய்ததும், இவ்வளவு பிரம்மாண்டமான திரைப்படத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததும் மிகப்பெரிய அனுபவமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த கதாபாத்திரத்திற்காக தன்னைத் தேர்வு செய்த படத்தின் நடிகர்கள் தேர்வுப் பொறுப்பாளர் முகேஷ் சாப்ராவுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். "எனது காட்சிகள் திரையில் இடம்பெறாவிட்டாலும், அந்த அனுபவமும் நினைவுகளும் எப்போதும் என்னுடன் இருக்கும். இந்த அற்புதமான பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கு நன்றி. ஜெய் ஸ்ரீராம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ராமாயணம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2028-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.