டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (நவ. 8) கடைசி நாளாக உள்ளது.

நடப்பு ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி ஆண்டு அட்டவணையின்படி, குரூப்-4 தோ்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த அக். 6-ஆம் தேதி வெளியிட்டது.

இந்தத் தேர்வின் மூலம், தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வருவாய் உதவியாளர் உள்பட பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 6,574 பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்ப உள்ளது.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவ. 5-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பிக்கும் அவகாசத்தை நவ. 8-ஆம் தேதி வரை நீட்டித்து டிஎன்பிஎஸ்சி அண்மையில் உத்தரவிட்டது.

இந்த அவகாசம் இன்று நள்ளிரவு 11.59 மணியோடு நிறைவடையும் நிலையில், விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தேர்வானது 2027, ஜன. 10-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

Today (Nov. 8) is the last day to apply for the TNPSC Group 4 examination.