சென்னை: தீபாவளி பண்​டிகையை சொந்த ஊர்​களுக்கு சென்று கொண்​டாட பேருந்து, ரயில் நிலை​யங்​களில் பயணிகள் குவிந்தனர். சென்​னை​யில் இருந்து 15 லட்​சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்​கொண்​டுள்​ளனர்.

சென்​னை​யில் வசிக்​கும் வெளியூரைச் சேர்ந்​தவர்​கள் தீபாவளி பண்​டிகையை கொண்​டாட தங்​கள் சொந்த ஊர்​களுக்கு செல்​வது வழக்​கம். பயணிகளின் வசதிக்​காக தமிழக போக்​கு​வரத்து துறை சார்​பில் நவ.5,6,7 ஆகிய நாட்​களில் சிறப்பு பேருந்​துகள் இயக்கப்பட்​டன.

சென்​னை​யில் இருந்து 5-ம் தேதி வழக்​க​மான பேருந்​துகள், சிறப்பு பேருந்​துகள் என மொத்​தம் 3,209 பேருந்​துகளில் 1.40 லட்​சம் பேர், 6-ம் தேதி 5,087 பேருந்​துகளில் 2.39 லட்​சம் பேர் என 2 நாட்​களில் மொத்​தம் 3.79 லட்​சம் பேர் பயணம் மேற்​கொண்​டர். நேற்று மொத்தம் 5 ஆயிரம் பேருந்​துகள் இயக்​கப்​பட்டு, 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயணம் மேற்​கொண்​டனர்.

சென்னை சென்ட்​ரல், எழும்​பூர், தாம்​பரம் உள்​பட முக்​கிய ரயில் நிலை​யங்​களில் நேற்​றும் கூட்​டம் அலைமோதி​யது. எழும்​பூரில் இருந்து புறப்​பட்ட பகல் நேர விரைவு ரயில், வைகை, பல்​ல​வன் விரைவு ரயில்​களில் கூட்​டம் நிரம்பி வழிந்​தது. மாலை​யில் புறப்பட்ட திருச்​செந்​தூர், கன்​னியாகுமரி உள்​பட பெரும்​பாலான ரயில்​களில் கட்​டுக்​கடங்​காத கூட்​டம் நிரம்பி வழிந்​தது.

சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​தில் இருந்து மேற்கு மாவட்டங்​களுக்கு புறப்​பட்ட பல்​வேறு ரயில்​களி​லும் கூட்​டம் நிரம்பி வழிந்​தது. சென்​னை​யில் இருந்து நவ.5,6,7 ஆகிய தேதிகளில் வழக்​க​மான விரைவு ரயில்​கள், சிறப்பு ரயில்​களில் இந்த 3 நாட்​களில் சுமார் 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயணம் மேற்​கொண்​டுள்​ள​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

தனியார் ஆம்னி பேருந்​துகளில் 2.50 லட்​சம் பேர், கார்​கள், இருசக்கர வாக​னங்​களில் என லட்​சக்​கணக்​கானோர் தங்​களது பயணத்தை தொடங்​கினர். கடந்த 3 நாட்​களில் அனைத்து விதமான போக்​கு​வரத்து சேவை​கள் வாயி​லாக 15 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் தங்​கள் சொந்த ஊர்​களுக்கு சென்​றுள்​ளனர்.

தீபாவளியால் விலை உயர்வு: குண்டு மல்லி கிலோ ரூ.1,100