சென்னை: தீபாவளி பண்​டிகையை கொண்​டாட பட்​டாசு வெடிக்கும் போது எதிர்​பாராமல் ஏற்​படும் காயங்​களுக்​குச் சிகிச்சை அளிக்க கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்துவ​மனை​யில் ஆண்​டுதோறும் சிறப்பு தீக்​காய சிகிச்சை வார்டு அமைக்​கப்​படு​கிறது.

அதன்​படி, இந்த ஆண்டு 25 படுக்​கைகளு​டன் சிறப்பு தீக்​காய வார்டு அமைக்​கப்​பட்​டுள்​ளது. அதேபோல், தீக்​காயங்​களுக்​குச் சிகிச்சை அளிக்​கும் மற்ற அரசு மருத்​து​வ​மனைகள், வட்​டார ஆரம்ப சுகாதார நிலை​யங்​களில் சிறப்பு வார்​டுகள் அல்​லது சிகிச்சை மையங்​கள் 24 மணி நேர​மும் செயல்​பட வேண்​டும் என்று சுகாதா​ரத் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இது​தொடர்​பாக சுகாதா​ரத் துறை அதி​காரி​களிடம் கேட்டபோது, “தீபாவளி அன்று அரசு மருத்​து​வக் கல்​லுாரி மருத்​து​வ​மனைகள், மாவட்ட மருத்​து​வ​மனைகளில் ஒவ்​வொருதுறை​யிலும் மருத்துவர்கள், செவி​லியர்கள் கட்​டாயம் பணி​யில் இருக்க வேண்டும். குறிப்​பாக, தீக்​காய சிகிச்சை, சாலை விபத்துகளுக்கான சிகிச்சை, காய்ச்​சல் மற்​றும் அவசர கால சிகிச்சை மையம் தயாராக இருக்க வேண்​டும். உயி​ரிழப்பு இல்லாத தீபாவளியை உறுதி செய்ய நட​வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

தீபாவளி: சொந்த ஊருக்கு செல்ல பேருந்து, ரயில்களில் அலைமோதிய கூட்டம்