தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சூர்யா. இந்த தீபாவளி கொண்டாட்டமாக தமிழில் வெளியாகியுள்ள திரைப்படம் சீன். சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
வசூல் மழையில் சீன்:
சீன் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகிய நிலையில், படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. முதல் நாள் சீன் படம் இந்தியாவில் ரூபாய் 22.25 கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாளான நேற்று மட்டும் இந்தியாவில் இந்த படம் ரூபாய் 23.50 கோடி வசூலைக் குவித்துள்ளது. படத்திற்கு கிடைத்த நேர்மறையான வரவேற்பு காரணமாக படத்தின் வசூல் தினசரி அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் தற்போது வரை படம் இந்தியாவில் ரூபாய் 52 லட்சம் வசூலைக் குவித்துள்ளது. உலகெங்கும் சூர்யாவின் சீன் படம் தற்போது வரை ரூபாய் 80 கோடிக்கு மேல் வசூலைக் குவித்துள்ளது. இதனால், படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சூர்யாவிற்கு தெலுங்கிலும் ரசிகர்கள் இருப்பதால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஹாட்ரிக் வெற்றி:
தீபாவளி போட்டியாக சீன், ராமாயணா மற்றும் மூக்குத்தி அம்மன் 2 ஆகிய படங்கள் வந்தது. இதில் சீன் படம் தவிர மற்ற இரு படங்களும் சாமி படங்களாக வந்துள்ளது. சீன் படம் காமெடி த்ரில்லர் படமாக வந்திருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், தீபாவளிக்கு பிறகு சீன் படத்திற்கு திரையரங்குகளில் காட்சிகள் மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. சூர்யாவிற்கு இந்தாண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. அதாவது, நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருக்கு இந்தாண்டு வெற்றி ஆண்டாக அமைந்துள்ளது.
ரசிகர்கள் மகிழ்ச்சி:
இந்தாண்டு வெளியான கருப்பு படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைய, அடுத்து வெளியான விஸ்வநாத் அன் சன்ஸ் படமும் வெற்றி பெற்றது. தற்போது வெளியாகியுள்ள சீன் படமும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. இதனால், மீண்டும் சூர்யா விட்ட இடத்தை நெருங்கி வருகிறார். ஹாட்ரிக் வெற்றியால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீது மாதவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் ஆகியோர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். சுனில் ஷ்யாம் இசையமைத்துள்ளார். சுமார் 25 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இந்த படம் ரூபாய் 80 கோடி வரை வசூலைக் குவித்துள்ளது.

