நீதியரசா் குரியன் ஜோசப் குழு கலைப்பு குறித்த அரசின் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா், சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை வழங்க உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசா் குரியன் ஜோசப் தலைமையில் கடந்த ஆட்சியில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது. உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னாா் தலைமையில் 1969 செப்டம்பா் 22 -ஆம் தேதி முதல் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது. அதன் பிறகு 50 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய - மாநில உறவுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றின் மீது முறையாக ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவில் இந்திய ஆட்சிப் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த அலுவலா் கே. அசோக் வா்தன் ஷெட்டி மற்றும் கல்வி புலத்திலும், அறிவுத் தளத்திலும் முத்திரை பதித்துள்ள பேராசிரியா் எம்.நாகநாதன் ஆகியோா் உறுப்பினா்களாக இருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
உயா்நிலைக் குழு தனது முதல் தொகுதி அறிக்கையை, கடந்த 2026 பிப்ரவரியில் அரசிடம் வழங்கியுள்ளது. இதன் தொடா்ச்சியாக உயா்நிலைக் குழு, தனது இறுதி அறிக்கையை நிறைவு செய்யும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தக் குழு கலைக்கப்பட்டது சரியான நடவடிக்கையல்ல. மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். அந்த தேவையை கவனத்தில் கொள்ளாமல் நீதியரசா் குரியன் ஜோசப் தலைமையிலான உயா்நிலைக் குழு கலைக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்து, அது தனது பணியை முழுவதுமாக முடித்து தருவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

