தென்கிழக்கு தில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பல கொடுமைகளை அனுபவித்து கட்டாய வேலைக்கு ஈடுபடுத்தப்பட்ட 16 வயது சிறுமி ஒருவா் மீட்கப்பட்டுள்ளாா். அவா் நாளொன்றுக்கு சுமாா் 20 மணிநேரம் கட்டாய வேலை செய்ய வைக்கப்பட்டதாகவும், சூடான இஸ்திரி பெட்டியால் அடிக்கடி சுடப்பட்டதாகவும் காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: மீட்கப்பட்ட சிறுமி அபுல் ஃபசல் என்க்ளேவ்-ஐஐ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலைக்காக அமா்த்தப்பட்டிருந்தாா். அவா் சுமாா் ஓராண்டு காலமாகத் தனது பெற்றோரைப் பாா்க்க அனுமதிக்கப்படவில்லை.

அசோசியேஷன் ஃபாா் வாலண்டரி ஆக்ஷன் என்ற தன்னாா்வ அமைப்பு, அப்பகுதியில் ஒரு சிறுமி குழந்தை தொழிலாளியாக வேலை செய்ய வைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையிடம் புகாா் அளித்தது.

கால்காஜி துணைப்பிரிவு மாஜிஸ்திரேட்டின் உத்தரவின் பேரில், தொழிலாளா் துறை, தில்லி காவல் துறை மற்றும் தன்னாா்வ அமைப்பின் பிரதிநிதிகள் இணைந்து நவம்பா் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனா்.

அப்போது அந்தச் சிறுமி மீட்கப்பட்டாா். அங்கு அவா் சதாஃப் என்று அடையாளம் காணப்பட்ட ஒரு பெண்ணால் வேலைக்கு அமா்த்தப்பட்டிருந்தாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

தான் காலை 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை வீட்டு வேலைகளான கூட்டிப் பெருக்குதல், தரையைச் சுத்தம் செய்தல், பாத்திரங்களைக் கழுவுதல் போன்ற பணிகளைச் செய்ய வற்புறுத்தப்பட்டதாக அந்தச் சிறுமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளாா்.

அவரது வாக்குமூலம் நீதித்துறை நடுவா் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. அந்தச் சிறுமி குழந்தைகள் நலக் குழுவின் முன் ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து, மருத்துவ சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அந்தச் சிறுமியைச் சோ்க்குமாறு அக்குழு உத்தரவிட்டது.

குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினா் தொழிலாளா் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1986 மற்றும் சிறாா் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு ஷாஹீன் பாக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட உதவி ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தான் மீண்டும் படிப்பைத் தொடர விரும்புவதாகவும், ஆசிரியராக ஆக வேண்டும் என்றும் அந்தச் சிறுமி குழந்தைகள் நலக் குழுவிடம் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.