புது தில்லி: நேரு-காந்தி குடும்பம் இந்துக்களை எப்போதும் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதி வந்துள்ளதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். 1966-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற, பசுவதைக்கு எதிரான போராட்டத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
'காங்கிரஸின் இருண்ட அத்தியாயம்' என்ற தலைப்பில் அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள தொடரின் ஒரு பகுதியாக, பசுவதையை நாடு முழுவதும் தடை செய்யக் கோரி அமைதி வழியில் நாடாளுமன்ற சாலையில் போராடிய சாதுக்களை ஒடுக்க, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அரசு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
1966-இல் துறவி கார்பத்ரி மகாராஜ் மற்றும் பாரதிய ஜன சங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரானந்த் ஆகியோர் இந்திரா காந்தியைச் சந்தித்து, பசுவதையைத் தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் இந்திரா காந்தி அதைச் செயல்படுத்த மறுத்துவிட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் 48-வது பிரிவில், பசுவதையைத் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையொட்டி, துறவியான கார்பத்ரி ஜி மகாராஜ், பாரதிய ஜன சங்க எம்.பி. ராமேஸ்வரானந்த் ஆகியோருடன் இணைந்து, 1966 பிப்ரவரி மாதம் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து 1966 மார்ச் மாதம் இருவரும் அப்போதைய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தாவைச் சந்தித்தனர். ஆனால், அப்போது 1967 பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்ததால் பசுவதை விவகாரத்தில் இந்து-முஸ்லிம் பிளவு ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு பசுவதை தடையைச் செயல்படுத்த இந்திரா மறுத்துவிட்டார்.
कॉंग्रेस का काला अध्याय, चैप्टर - 236 236. 7 नवंबर 1966 संविधान के आर्टिकल 48 में अम्बेडकर जी के नेतृत्व में गौ हत्या पर प्रतिबंध लगाने का सुझाव दिया है,उसी के अनुसार भारत के महान संत करपात्री जी महाराज ने फ़रवरी 1966 में प्रधानमंत्री इंदिरा गांधी जी से भारतीय जनसंघ के सांसद रामेश्वरानंद जी के साथ मुलाक़ात की थी ।मार्च में 1966 में दोनों की मुलाक़ात तत्कालीन गृहमंत्री गुलज़ारी लाल नंदा के साथ हुई,लेकिन चुनाव 1967 का नज़दीक था कॉंग्रेस को गाय माता में हिंदू मुस्लिम दिखता था अतः इंदिरा जी ने इसे लागू करने से मना कर दिया ।6-7 नवंबर को स्वामी करपात्री जी महाराज ने संसद मार्ग पर हज़ारों साधुओं के साथ प्रदर्शन शुरू किया,नतीजा निहत्थे साधुओं पर इंदिरा जी ने बर्बरता से गोली चलवाई ।सैकड़ों साधु मारे गए,लाशें ग़ायब कर दी गई ।देश भर में धरना प्रदर्शन अनशन चालू हो गया ।अराजकता के माहौल व हिंदू विरोधी मानसिकता को दबाने के लिए इंदिरा गांधी जी ने @RSSorg का साथ लिया,पहले तो गृहमंत्री गुलज़ारी लाल नंदा को पद से हटाया,फिर गौ हत्या पर प्रतिबंध और गोलीबारी में हुई मौत के कारण के लिए राष्ट्रीय स्वयंसेवक संघ के सरसंघचालक माननीय गोलवलकर जी के साथ एक न्यायिक कमिटि बनाई जिसका नेतृत्व सुप्रीम कोर्ट के पूर्व मुख्य न्यायाधीश अमल सरकार जी को सौंपा,इसके सदस्य @RSSorg के सरसंघचालक गोलवलकर जी,पुरी के शंकराचार्य जी तथा अमूल डेयरी के वर्गीज़ कुरियन बने ।कमिटि की कोई बैठक नहीं हुई,कोई कार्यालय नहीं बना,स्वाभाविक तौर पर कोई रिपोर्ट नहीं आई ।नेहरु गॉंधी परिवार ने हमेशा हिन्दू को दोयम दर्जे का नागरिक माना और उसे प्रताड़ित करने का मौक़ा कभी नहीं छोड़ा #CongressDarkHistory
— Dr Nishikant Dubey (@nishikant_dubey) November 7, 2026
இதையடுத்து 1966 நவம்பர் 6-7 தேதிகளில், சுவாமி கார்பத்ரி மகாராஜ் தலைமையில் ஆயிரக்கணக்கான சாதுக்கள் தில்லியின் நாடாளுமன்ற சாலையில் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, சாதுக்கள மீது துப்பாக்கிச் சூடு நடத்த இந்திரா காந்தி உத்தரவிட்டார். இதில் நூற்றுக்கணக்கான சாதுக்கள் கொல்லப்பட்டனர், மேலும் அவர்களின் உடல்கள் மறைக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் போராட்டங்களையும் ஏற்படுத்தியது. இதையடுத்து கொந்தளிப்பையும் போராட்டங்களையும் கட்டுப்படுத்த இந்திரா காந்தி, ஆர்எஸ்எஸ் ஆதரவை நாடியதாகவும், அரசு மீதான குற்றச்சாட்டுகளை தவிர்ப்பதற்காக, அப்போது உள்துறை அமைச்சராக இருந்த குல்சாரிலால் நந்தாவை அமைச்சரவையில் இருந்து நீக்கினார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் எம்.எஸ். கோல்வால்கர், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அமல் சர்க்கார், புரி சங்கராச்சாரியார் மற்றும் அமுல் டெய்ரியைச் சேர்ந்த வர்கீஸ் குரியன் ஆகியோர் உள்ளடக்கிய ஒரு நீதி விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டார். நீதி குழுவின் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அமல் சர்க்கார் நியமிக்கப்பட்டார்.
மேலும், இந்தக் குழு எந்தக் கூட்டத்தையும் நடத்தவில்லை, அலுவலகம் எதையும் அமைக்கவில்லை; இயல்பாகவே, எந்த அறிக்கையும் தயாரிக்கவோ, சமர்ப்பிக்கவோ இல்லை. இந்தக் குழு திட்டமிட்டே செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும், நேரு-காந்தி குடும்பத்தினர் எப்போதும் இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாகவே கருதி வந்துள்ளனர்; அவர்களை ஒடுக்குவதற்கான எந்த வாய்ப்பையும் அவர்கள் தவறவிட்டதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
நிஷிகாந்த் துபேவின் இந்த கருத்து இந்திய அரசியலில் பெரும் விவாதங்களையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளன.
காங்கிரஸ் தனது வாக்கு வங்கி அரசியலுக்காக இந்துகளுக்கும் மற்றவர்களுக்கும் வெவ்வேறு விதமான சட்டங்களை உருவாக்கியதாகவும், பிரிவினைக்கு அடித்தளம் அமைத்ததாக சமூக வலைத்தளம் மற்றும் பொதுவெளியில் அவர் தொடர்ந்து விமரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

