திருவண்ணாமலை,

பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை முழுமையாக இணைத்து கொண்டு சிறப்பான மற்றும் பாராட்டத்தக்க வகையில் ஆற்றிவரும் அரிய தொண்டினை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது தமிழ் நாடு அரசால் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது.

டாக்டர் அம்பேத்கர் விருது

2026-ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது வருகிற ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பபடிவத்தை தமிழ்நாடு அரசின் www.tn.gov.in இணையதளத்தில்https://www.tn.gov.in/form-view.php?dep-id=MQ== என்ற இணைப்பை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல இயக் குனரக அலுவலகம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.

கலெக்டரின் பரிந்துரை, ஒப்புதலுடன் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள் வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகும். இந்த விருதினை பெற விரும்புவோர் தங்களை பற்றிய முழு விவரங்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தாங்கள் ஆற்றியுள்ள அரிய தொண்டுகள், சாதனைகள், அதற்கான ஆவணங்கள் மற்றும் சான்றுகள் ஆகியவற்றை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.