சென்னை,

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;-

வாழ்த்து

திரையுலகில் கலைமொழியைச் செழுமைப்படுத்தியும், அரசியலில் தமிழ்மொழியின் மாண்பு, மாநில உரிமைகள் உள்ளிட்டவற்றுக்காகத் தமது கருத்தாற்றலை வெளிப்படுத்தியும் வரும் அன்பு சகோதரர், மாநிலங்களவை உறுப்பினர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கலைஞானி கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

கலையை நேசிப்பதிலும், கருத்துகளைப் பரிமாறுவதிலும் என்றும் இளமை குன்றாத தாங்கள், கலைப்பயணத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்கவும், அறிவார்ந்த சிந்தனைகளாலும் அரசியல் செயல்பாடுகளாலும் சமூகத்திற்குச் சிறந்த பங்களிப்புகளை வழங்கவும் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.