கோவையில் அண்மையில் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் திறந்து வைக்கப் பெற்ற 'பெரியார் அறிவுலகம்' என்னும் நூலகத்தில் இடம் பெற்று பல நூல்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் அந்த நூலகத்தை நேரில் சென்று பார்வையிட்டதில் அவர் இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி இணையத்தில் பகிர்ந்திருந்தார்.
சான்றுக்கு சில நூல்களைக் குறிப்பிட்டு நூல்களைக் கொள்முதல் செய்ததில் எத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். இது மிகுந்த பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது, இந்த நிலையில் இந்த நூல்களை கூடுதலான விலைக்கு கொள்முதல் செய்த்தால் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது. எனவே விசாரணை ஆணயம் அமைத்து உண்மை கணடறிய வேண்டு என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
போலி நிறுவனங்களின் பெயரால் தரமில்லாத நூல்களைக் கூடுதலான விலைக்கு கொள்முதல் செய்ததால் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது என ஊகிக்கும் அதே வேளையில்; வரலாற்றுப் பிழைகள் மலிந்த மிகவும் கீழான நூல்களை நூலகங்களில் வைத்திருப்பது புதிய -இளைய தலைமுறையினரைப் பாழாக்கும் மிகமோசமான மன்னிக்கமுடியாத பெருங்குற்றம் ஆகும். இது தீராத ஆத்திரத்தையும் பெருங்கவலையையும் அளிக்கிறது.
இதன்பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிந்து தொடர்புடையோர் யாவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை அளித்திட அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட அரசுக்கான பொதுநூலகங்களில் இடம்பெற்றுள்ள நூல்களின் உள்ளீட்டுக்கான தரம் எத்தகையது என்பதைக் கண்டறியவும்; போலி நிறுவனங்களின் மூலம் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளைக் கண்டறிந்து தொடர்புடையோரைத் தண்டிக்கவும் ஏதுவாக தமிழ்நாடு அரசு உடனடியாக 'விசாரணை ஆணையம்' ஒன்றை அமைத்திட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
என்று தெரிவித்துள்ளது.
