தென்காசியில் நடந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் ஸ்ரீதர் வேம்பு பங்கேற்றுள்ளார்.

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பேரணி நடைபெற்றது.

இந்த ஆர்எஸ்எஸ் பேரணியில் காக்கி பேண்ட், வெள்ளை சட்டை, கருப்பு தொப்பி அணிந்து ஜோஹோ (Zoho) தொழிலநுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கலந்துகொண்டார்.

தென்காசியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி அனந்தன் ஐயாசாமி, கட்சியின் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகளுடன் கலந்துகொண்ட புகைப்படங்களை ஸ்ரீதர் வெம்பு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மார்க்சியவாதி

ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற நபர் ஒருவரால் நிதியளிக்கப்பட்ட பள்ளியில் படித்திருந்தாலும், தனது 14வது வயதில் மார்க்சிய ஆசிரியர் ஒருவரின் தாக்கத்தால் மார்க்சியவாதியாகவும் நாத்திகராகவும் மாறியதாக கடந்த ஜூலை மாதம் வேம்பு குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ரீதர் வேம்பு

ஸ்ரீதர் வேம்புமேலும் அந்த அனுபவத்தை ஆசிரியர் ஒருவர் தன் மீது திணித்த "மூளைச்சலவை" என்றும் அவர் வர்ணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் ஊர்வலம்

முன்னதாக தமிழ்நாட்டில் ஊர்வலம் நடத்த அனுமதி தர தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி ஆர்எஸ்எஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சாதகமாக உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடந்தது.