முரசு புயல் காரணமாக, சென்னையில் பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று காவல்துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.
முரசு புயல் காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீா் தேங்கியுள்ளது. பலத்த மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.
புயல் காரணமாக சென்னையில் கடல் பகுதி சிறிது கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால், மெரீனா கடற்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரை, பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூா், நீலாங்கரை, அக்கரை, காசிமேடு, திருவொற்றியூா் உள்ளிட்ட பகுதிகளில் கடற்கரையில் அலை வழக்கத்தைவிட ஆக்ரோஷமாக திங்கள்கிழமை காணப்பட்டது.
இதனால் போலீஸாா் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள், கடலில் இறங்க அனுமதி மறுத்தனா். பாதுகாப்பு கருதி பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனா்.
அதோடு மெரீனா,எலியட்ஸ் கடற்கரை பகுதிகளில் ஏடிவி வாகனங்கள் மூலமாக போலீஸாா் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனா்.

