சென்னை: தேனி சிறை​யில் இருந்து 17 கைதி​கள் தப்​பிய விவ​காரத்​தில் அவர்​களுக்கு முறை​யான உணவு மற்​றும் குடிநீர் வழங்​காமல் சித்​ர​வதை செய்​யப்​பட்​டனரா என்​பது குறித்து விசா​ரணை நடத்தி அறிக்கை தாக்​கல் செய்ய மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு தலை​வர்​களுக்கு மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு செயல் தலை​வரும், சென்னை உயர் நீதி​மன்ற மூத்த நீதிப​தி​யு​மான எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம் உத்​தர​விட்​டுள்​ளார்.

தேனி சிறை​யில் இருந்து 17 கைதி​கள் தப்​பிச் சென்​றனர். பின்​னர் அவர்​கள் மீண்​டும் கைது செய்​யப்​பட்டு கடலூர், மதுரை, சேலம், நெல்லை மத்​திய சிறை​களில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர்.

தப்​பிய கைதி​களில் ஒரு​வர் தங்​களுக்கு தேனி சிறை​யில் முறை​யான உணவு, குடிநீர் வழங்​காமல் அடித்து சித்​ர​வதை செய்​த​தால்​தான் தப்​பிச் சென்​ற​தாக வீடியோ வெளி​யிட்​டிருந்​தார்.

இந்​நிலை​யில் தப்​பிய 17 கைதி​களும் தேனி சிறை​யில் முறை​யான உணவு, குடிநீர் வசதி வழங்​கப்​ப​டா​மல், அடித்து துன்​புறுத்​தப்​பட்​டார்​களா என்​பது குறித்து தேனி, மதுரை, கடலூர், சேலம், நெல்லை மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு தலை​வர்​களான மாவட்ட நீதிப​தி​கள், சம்​பந்​தப்​பட்ட 17 பேரை​யும் தனித்​தனி​யாக சந்​தித்து அவர்​களிடம் இதுதொடர்​பாக விசா​ரணை நடத்த வேண்​டும் என மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு செயல் தலை​வரும், சென்னை உயர் நீதி​மன்ற மூத்த நீதிப​தி​யு​மான எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு உறுப்​பினர் செயல​ரான மாவட்ட நீதிபதி எஸ். பால​கிருஷ்ணன் விடுத்​துள்ள அறிக்​கை​யில், மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு செயல் தலை​வரின் உத்​தர​வுப்​படி நடத்​தப்​படும் இந்த விசா​ரணை​யின்​ போது மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக் குழு தலை​வர்​கள் சம்​பந்​தப்​பட்ட 17 பேரை​யும் நேரில் சந்​தித்து விசா​ரிக்க வேண்​டும்.

அப்​போது சிறை அதி​காரி​கள் யாரும் உடன் இருக்க அனு​ம​திக்​கக்​கூ​டாது.

ஒரு​வேளை அந்த கைதி​கள் கூறு​வது உண்​மை​யாக இருந்​தால் அதற்கு காரண​மானவர்​கள் குறித்​தும் விசா​ரிக்க வேண்​டும்.

தப்​பிச்​சென்று மீண்​டும் கைது செய்​யப்​பட்ட போதும் அவர்​கள் அடித்து சித்​ர​வதை செய்​யப்​பட்​டார்​களா என்​பது குறித்​தும், அவர்​களின் உடலில் காயங்​கள் உள்​ளதா என்​பது குறித்​தும் விசா​ரித்து தேவை​யான மருத்​துவ வசதி​களை செய்து கொடுக்க வேண்​டும்.

இதுதொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு தலை​வர்​கள் வரும் நவ.16-க்​குள் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும்​, என உத்​தர​விட்​டுள்​ளார்​.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க இன்று கருத்து கேட்பு கூட்டம்