திருவள்ளூர்/மதுராந்தகம்: தொடர் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 435 கன அடியாக அதிகரித்துள்ளது. பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
முரசு புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 435 கன அடி நீர்வரத்து உள்ளது. ஆகவே 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 2,355 மில்லியன் கன அடியாக உள்ளது.
அதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 197 கன அடி நீர்வரத்து உள்ளது. இதனால் இதன் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் 1,407 மில்லியன் கன அடி நீர் உள்ளது.
பூண்டி ஏரிக்கு 60 கன அடி நீர் வருகிறது. இதன் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் 581 மில்லியன் கன அடி நீர் உள்ளது. சோழவரம் ஏரிக்கு 55 கன அடிநீர் வருகிறது.
1,081 மில்லியன்கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் 148 மில்லியன் கன அடியும், கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிக்கு 20 கன அடி நீர் வருவதால், 500 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவில் 249 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்?
