முறைகேடாகப் பணம் திரட்ட என்னவெல்லாம் வழி இருக்கிறது என்று விசில் பார்ட்டி வில்லங்கஸ்தர்களிடம் தான் முறையாக ‘கேட்லாக்’ வாங்கிப் படிக்க வேண்டும் போலிருக்கிறது. சரி, விஷயத்துக்கு வருவோம்.
விழுப்புரம் மற்றும் பக்கத்து மாவட்ட விசில் பார்ட்டி நிர்வாகிகள் பலரிடமும், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் பணத்தை அள்ளலாம் எனக் கூறி, சுமார் ரூ.13 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தேட்டம் போட்டுவிட்டாராம் ‘பெருமாள்’ பெயர் கொண்ட அக்கட்சியின் மாவட்ட முக்கியப் புள்ளி ஒருவர். 2026 தேர்தலில், விசில் கட்சியில் சீட் கொடுத்தும் வெற்றிபெறாத அந்தப் ‘பெருமாள்’, ‘மகிழ்ச்சி’ மாண்புமிகு பேரைக் கேட்டாலே மட்டையாய் மடங்குபவராம்.
இதனால், கிரிப்டோவுக்காக காசைக் கணக்கு வழக்கில்லாமல் கொடுத்துவிட்டு நிற்கும் பலரும், எதிர்த்துக் கேட்க முடியாமல் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்களாம். இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு கிரிப்டோ முதலீடு குறித்து கட்சி நிர்வாகி ஒருவரிடம் திருவாளர் ‘பெருமாள்’ பேசும் ஆடியோவும், பணத்தைத் திருப்பித் தருவதாக அவர் சொல்லும் ஆடியோவும், தற்போது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பெருமாளுக்கு ‘ஆவேச அர்ச்சனை செய்யும்’ ஆடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி கட்சிக்குள் கலகத்தை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில், கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கும் சிலரிடம், “நீங்க குடுத்த பணத்துக்குத்தான் உங்களுக்கு பொறுப்புப் போட்டாச்சுல்ல... அப்புறம் என்ன பணம் கேக்குறீங்க?” என்று டேலி செய்கிறாராம் ‘பெருமாள்’.
Tenzing: எவரெஸ்ட் உச்சியை தொட்ட முதல் மேய்ப்பன் | ஓடிடி திரை அலசல்
